ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே?

Photo of author

By Vinoth

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே?

இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கே எல் ராகுல் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் அவர் காயமடைந்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரிலும் இடம்பெற மாட்டார் என சொலல்ப்படுகிறது.

அதில் கே எல் ராகுல் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் அணியில் இணைந்துள்ளார்.. அந்த வரிசையில் இப்போது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் மற்றும் ஜாஸ்ப்ரீத் பூம்ரா ஆகியோரும் காயம் காரணமாக அணியில் இணையவில்லை.

ஹர்ஷல் படேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் அவர் காயமடைந்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரிலும் இடம்பெற மாட்டார் என ஏற்கபனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாடும் அணியில் மீண்டும் விராட் கோலி இணைந்துள்ளார்.

அணி விவரம்.

ரோஹித் ஷர்மா(கே), கே எல் ராகுல் (து.கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்தர ஜடேஜா, அஸ்வின், சஹால், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்,  ஆவேஷ் கான்

ஸ்டாண்ட்பை வீரர்களாக ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், மற்றும் தீபக் சஹார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.