பதவியேற்பு நாளில் திமுகவின் எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்!

Photo of author

By Sakthi

பதவியேற்பு நாளில் திமுகவின் எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்!

Sakthi

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிடர் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி அடைந்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
திமுக மட்டும் தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 159 இடங்களில் அந்த கூட்டணி வெற்றி அடைந்திருந்தது.அத்துடன் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 166 இடங்களிலும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 76 இடங்களிலும் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், நேற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள் இதற்கிடையே ஜெயங்கொண்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் கண்ணனின் தாயார் மணிமேகலை நேற்று காலை இயற்கை எய்தினார்.

ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டசபை உறுப்பினர் கணேசனின் மனைவியும் தற்போதைய ஜெயங்கொண்டம் சட்டசபை உறுப்பினர் கண்ணனின் தாயாருமான மணிமேகலை காலை 11 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் என்று உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் சென்னையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இருந்த சமயத்தில் அவருடைய தாயார் சொந்த ஊரில் காலம் ஆகியிருக்கிறார். இந்த சம்பவம் திமுகவினர் இடையே பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.