அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் டெக் மகேந்திரா!

Photo of author

By Sakthi

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் அந்த நிலையின் காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. அதோடு புதிதாக வேலைக்கு சேருமாறு ஆணை வழங்கப்பட்ட பலரையும் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த பொருளாதார மந்த நிலையின் காரணமாக வேலையின்மை மற்றும் வேலை இழப்பு உள்ளிட்ட நிலைகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த நோய் தொற்று காரணமாகவும், உலகம் முழுவதும் நடைபெற்ற அசாதாரணமான சம்பவங்கள் காரணமாகவும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.

ஆனாலும் இந்திய டெக் ஜாம்பவனான மஹிந்திரா அனைத்திலிருந்தும் வேறுபட்டு புதியதொரு செய்தியை அறிவித்திருக்கிறது. அடுத்து வரவிருக்கும் ஐந்து வருடங்களில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பாக சற்றேற குறைய 20000 பணியாளர்களை புதிதாக பணியமர்த்தும் திட்டத்தில் இருப்பதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

பிசினஸ் டுடே விற்கு அவர் வழங்கிய நேர்காணலில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 20 ஆயிரம் பணியாளர்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் ஏற்கனவே 1.64 லட்சம் பணியாளர்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார்கள் இதனை 1.84 இலட்சமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம் என்று மகேந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் மேலாண்மை இயக்குனருமான குர்நாணி தெரிவித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5877 பணியாளர்களை அந்த நிறுவனம் புதிதாக வேளையில் அமர்த்திருக்கிறது. அதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் 6862 எண்ணிக்கையிலான பணியாளர்களை புதிதாக இணைத்துள்ளது தற்போது வரையில் 16912 என்ற எண்ணிக்கையில் டெக் மகேந்திரா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

அதோடு டெக் மகேந்திரா நிறுவனத்தை பொறுத்தவரையில் வேலை இழப்பு என்பது கடந்த வருடங்களை விடவும் மிகவும் குறைந்துள்ளதாகவே இருக்கிறது இதற்கு முன்னர் நடைபெற்ற காலா ஆண்டில் 22 சதவீதமாக இருந்த வேலை இழப்பானது தற்போது 20 சதவீதமாக குறைந்தது.

எதிர்காலத்தில் உண்டாக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை உலகெங்கிலும் உண்டாகும் திறன் மேம்பாடுகளுக்கும் ஏற்ற விதத்தில் நாங்கள் ஆட்களை திட்டமிட்டு நியமனம் செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்ற நிதி ஆண்டில் பத்தாயிரம் பேரை புதிதாக பணியமர்த்திருக்கின்ற அந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் முடிந்த அளவு அதிக பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகளை செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது சென்ற மாதத்தில் குஜராத் அரசுடன் ஒன்றிணைந்து அடுத்த ஐந்து வருடங்களில் 3000 ஐடி பணியாளர்களை வேலைக்கு எடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.