தங்க நகை காணாமல் போனதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Photo of author

By Sakthi

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த 2017ஆம் வருடம் விழுப்புரத்தை சார்ந்த அருள்பிரகாசம் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அனுப்பிரித்தி சென்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அப்போது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதன் பிறகு வீட்டிற்கு வந்த அவர் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அவர் வீட்டின் குளியலறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.