அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…

0
106

 

அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…

 

புதுச்சேரியில் அரசு மருத்துவமனை ஒன்றில் உள்ள கழிவறையில் வாலிபர் ஒரு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் சஞ்சீவ் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் ராஜ்குமார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். கொத்தனாரக வேலை செய்யும் ராஜ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட போதை மறுவாழ்வு மையத்துக்கு சொன்றும் போதை பழக்கதை இவரால் விடமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.

 

இந்நிலையில் ராஜ்குமார் அவர்களுடைய அண்ணன் கோபி என்பவர் சர்க்கரை நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபிக்கு துணையாக ராஜ்குமார் அவர்கள் இருந்து அண்ணன் கோபியை கவனித்து வந்துள்ளார்.

 

இதற்கு மத்தியில் ராஜ்குமார்.அவர்களை சில நாட்களுக்கு முன்னர் காணாத காரணத்தினால் அனைவரும் ராஜ்குமாரை தேடினர். எங்கு தேடியும் ராஜ்குமார் அவர்கள் கிடைக்கவில்லை.

 

இதையடுத்து கோபி அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமம் அரசு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தின் கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது சந்தேகம் எழுந்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு கழிவறையின் கதவுகளை உடைத்து பார்த்த பொழுது ராஜ்குமார் அவர்கள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு காவல் துறையினர் அழுகிய நிலையில் இருந்த ராஜ்குமார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போய் விட்டதாக ராஜ்குமார் அவர்களை தேடிய உறவினர்களுக்கு அழுகிய நிலையில் ராஜ்குமார் அவர்கள் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது உறவினர்களின் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Previous articleவடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…
Next articleதேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…