தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு… 

0
125

 

தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு…

 

அமெரிக்கா நாட்டில் வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கால்களை உரசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபர் வித்தியாசமான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

அமெரிக்கா நாட்டில் நிவேடா மாநிலத்தில் ஸ்டேட்லைன் ரிச்சர்ட் எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள பூட்டப்படாத இரண்டு வீடுகளில் அதிகாலை நேரத்தில் புகுந்த மார்க் ஆண்டனி கோன்ஸாலஸ் என்ற வாலிபர் ஒரே விதமான குற்றங்களை செய்துள்ளார்.

 

அதாவது முதலில் பூட்டப்படாத வீட்டினுள் சென்ற மார்க் ஆண்டனி கோன்ஸாலஸ் அந்த வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் காலின் அருகே அமர்ந்தார். பின்னர் அந்த பெண்ணின் உள்ளங்கால்களை உரசிக் கொண்டே இருந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் பெண் காலில் எதோ உரசுவது போல இருக்க திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்தார். காலின் அருகே ஒருவர் இருப்பதை பார்த்த அந்த பெண் கூக்குரலிட்டார். அந்த பெண் சத்தம் போட்டதை அடுத்து மார்க் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்.

 

இதையடுத்து அந்த குடியிருப்பு பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டினுள் நுழைந்து இதே போன்று தூங்கி கொண்டிருக்கும் பெண்ணின் காலை உரசினார். மார்க் ஆண்டனி கோன்ஸாலஸ் ஏற்கனவே பல குற்றங்களுக்காக கலிப்ஃபோர்னியா நகர காவல்துறையால் தேடப்படுபவர்.

 

மார்க் ஆண்டனி மீது பெண்கள் காலணி திருட்டு வழக்கு, அத்துமீறி வீட்டினுள் நுழைதல், மேலும் அத்துமீறி நுழையும் இடங்களில் பாலியல் ஆசைகளை தீர்த்துக் கொள்வதற்கு முறையற்ற வழியில் ஈடுபடுதல் போன்ற பல பரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் உள்ளது.

 

மார்க் ஆண்டனி அவர்களின் குற்றச் செய்லகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி அத்து மீறி வீட்டினுள் நுழைதல், அத்து மீறி பிறரை தீண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மார்க் ஆண்டனி கோன்ஸ்லஸ் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்க் ஆண்டனி கோன்ஸ்லஸ் விசாரணைக்கு பிறகு மெர்செட் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் மார்க் ஆண்டனி அவர்கள் நிவேடா மாநிலத்தின் டக்ளஸ் கவுன்டி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

 

Previous articleSBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தொடர்ந்து நீடிக்கப்படும் சலுகை!!
Next articleமுதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி… பொம்மன், பெள்ளியை சந்தித்து பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!!