சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!
சேலம் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,நவீன் மற்றும் விக்னேஸ்வரன்.இவர்கள் மூன்று பேரும் காடையாம்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்தனர்.அவர்களின் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.அதனால் அவர்களை தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் நாங்கள் ஷீ கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றோம்.இதே பகுதியை சேர்ந்த பெண் எங்களுடன் பணிபுரிந்து வருகின்றார்.அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பள்ளி மாணவிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது எனவும் கூறியுள்ளனர்.
மேலும் தீவிர விசாரணை நடத்திய போது அந்த பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்து செல்ல வந்தோம் எனவும் கூறினார்கள். இதனையடுத்து மூன்று பேர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இவர்களை சேலம் மத்திய சென்று அடைத்தனர்.