பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!!

0
153
#image_title

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!!

கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் பச்சை மிளகாயை திருடிய இரண்டு வாலிபர்களை அந்த கிராம மக்கள் தூணில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பச்சை மிளகாயை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். பச்சை மிளகாய் விவசாயம் செய்வதில் அந்த கிராம மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் அந்த கிராமத்தில் விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு அதிக விலையும் அமோக வரவேற்பும் கிடைத்து வருவது தான்.

தற்பொழுது கதக் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பச்சை மிளகாயை பயிரிட்டு உள்ளனர். இந்த பச்சை மிளகாய்கள் தற்பொழுது அறுவடைக்கு தயாராகி இருக்கின்றது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பச்சை மிளகாய்கள் அவ்வப்போது திருட்டு போகும் சம்பவம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பச்சை மிளகாய் திருடு போனதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பச்சை மிளகாய் திருட்டு போகாமல் இருக்க கிராம மக்கள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், சிவன் என்ற இரண்டு வாலிபர்கள் அதிகாலையில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டுள்ள திட்டத்தில் இறங்கி பச்சை மிளகாய்களை பறித்து துணிகளில் மூட்டையாக கட்டி எடுத்துச் செல்ல முயன்றனர்.

இதை அங்கு காவலுக்கு இருந்த விவசாயிகள் பார்த்து பச்சை மிளகாய்களை திருடிச் செல்ல முயன்ற இரண்டு வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இரண்டு வாரங்களுக்குள் தர்ம அடி கொடுத்த விவசாயிகள் தொடர்ந்து அந்த வாலிபர்களை திருடிய பச்சை மகள்களுடன் சேர்த்து கிராமம் முழுவதும் அடித்துக் கொண்டே இழுத்துச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் இருவரும் திருடிய பச்சை மிளகாய்களுடன் சேர்த்து இரண்டு பேரில் ஒருவரை கோயில் தூணில் கட்டி வைத்து பின்னர் ஒருவரை மற்றொரு வாலிபரின் தோள் மீது நிக்க வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமத்தின்முக்கியஸ்தர்கள் இரண்டு பேர் கோயில் தூணில் கட்டி வைத்த இரண்டு வாலிபர்களையும் மீட்டு மீண்டும் இது போன்ற திருட்டு செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி வாலிபர்கள் சிவன் மற்றும் மஞ்சுநாத் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

Previous articleதமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு !!
Next article“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!