விரைவில் வருகிறது 5 ஜி சேவை! ஜியோ நிறுவனம் அதிரடி!

Photo of author

By Sakthi

1000 நகரங்களில் 5g சேவையை வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது அந்த விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்குவதற்கு ஜியோ திட்டமொன்றை வகுத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியிருக்கிறது.

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைந்த செலவில் ஏராளமான சேவைகளை ஜியோ வழங்கி வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக 5 ஜி தொழில்நுட்ப சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறது ஜியோ நிறுவனம். இது குறித்து ஜியோ நிறுவனத்தின் 2021-22ம் வருடத்திற்கான ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அண்மையில் முடிவடைந்த 5ஜி அலைக்கற்ற ஏலத்தில் இந்த ஜியோ நிறுவனம் தான் அதிக விலைக்கு ஏலமெடுத்தது. 5ஜிக்கான சேவையை அளிப்பதில் அதிகபட்சமாக சுமார் 1.50 லட்சம் கோடிக்கு ஜியோ நிறுவனம் அலைக்கற்றையை ஏலத்திலெடுத்திருக்கிறது.

5ஜியை பொறுத்தவரையில் 4ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும். முதல் கட்டமாக நாட்டிலிருக்கின்ற 1000 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறது ஜியோ. 3டி மேப்புகளும் இந்த 5 ஜி சேவையில் இடம்பெற்று வருவதால் இதன் சேவை அதிக தரம் வாய்ந்ததாக இருக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

700 மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றை ஜியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது, இதன் மூலமாக டவரிலிருந்து குறைந்தது 6 முதல் அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் வரையில் சிக்னல் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த புதிய சேவையை வழங்குவதற்காக பின்லாந்தின் ஊலு பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது இந்த ஜியோ நிறுவனம். 5 ஜிக்கு அடுத்த கட்டமாக 6ஜி சேவை தொடர்பாக மிக தீவிரமாக இந்த பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.