குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்!

Photo of author

By Parthipan K

குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்!

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் இன்று முதல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் திருத்தம் செய்யப்பட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய சட்ட திருத்தத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூல் செய்யப்படுவதுடன் அவரது பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீம்ஸ் கிரியேட்டர்கள் குடிச்சிட்டு பைக்ல போனாலும் அபராதம் குடிச்சிட்டு பின்னாடி உக்காந்துட்டு போனாலும் அபராதம் என மீம்ஸ் போட்டு காலாய்த்து வருகின்றனர்.