கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!
புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில் நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார்.
இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கிடையே கோவிலில் உள்ளே நுழையும் போது 18 அடி உயரத்தில் நித்தியானந்தாவை போல் சிலை செய்து அதற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தச் சிலையை பார்த்ததும் போலீசார்கள் மற்றும் பொதுமக்கள் என முருகனை வழிபட வரும் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சியை பார்த்தால் ஏற்கனவே முருகன் வேடம் அணிந்தது போல் சூலத்துடன் தோன்றி இருக்கும்.இந்த காட்சியை குறிப்பாக வைத்து நித்தியானந்தாவின் சிலையும் அப்படியே அமைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து காவல்துறையினர் கோவில் விசேஷம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபொழுது இது சிவனின் மற்றொரு அவதாரம் என காலபைரவரை சுட்டி காட்டினார்கள். முன்னுக்கு பின்னால் பதில் அளித்த சிவாச்சாரியார்கள் அறைக்கு சென்று பார்த்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது.
அந்த அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் மற்றும் நித்யானந்தாவிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், மேலும் ஏற்கனவே அவரின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து பூஜை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்யானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஒரு சில பக்தர்கள் அந்த சிலையின் அருகில் நின்ற புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த கும்பாபிஷேக விழாவில் அழைப்பிதழ்களாக முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. அபிஷேக விழாவில் எம்ஏக்கள் சிவசங்கர் கே.எஸ்.பி, பலர் இதில் கலந்து கொண்டார்கள். இச்செயலை கண்ட அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.