தெலுங்கு நடிகர் சோனுவை அடித்து வெளுத்த நடிகர்!! கோபமடைந்த சிறுவனின் ஆத்திர செயல்!!

Photo of author

By CineDesk

தெலுங்கு நடிகர் சோனுவை அடித்து வெளுத்த நடிகர்!! கோபமடைந்த சிறுவனின் ஆத்திர செயல்!!

தமிழகத்தை விடாது  துரத்தும் கொரோனா பாதிப்பால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனர். பலர் வேலை இல்லாமலும் மிகவும் வறுமையில் உள்ளனர். இந்த நிலையில் பல சினிமா நடிகர்கள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு பட வில்லன் சோனு சூத் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

கொரோனாவால்  வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பல ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுத்து உதவி செய்து வந்தார். மேலும் இன்னும் கூட பலருக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றார். கொரோனா பரவல் அதிகரித்தால் நாடு முழுவதும் ஊடரங்கு  அமலுக்கு வந்தது. ஊரடங்கு சமயத்தில் வேலை இழந்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தும் உதவி செய்தார். மேலும் வெளிநாடுகளில் சிக்கி கஷ்டப்பட்ட இந்திய மாணவர்களை தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்து காப்பாற்றினார். இவரின் இந்த சமூக செயலினால் ஆந்திரா தெலுங்கானா மக்கள் நடிகர் சோனு சூத் அவர்களை கடவுளாக பார்கிறார்கள். மேலும் இவர் தமிழ் சினிமாவிலும் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போதும் தெலுங்கானா மாநிலத்தில் சங்கரெட்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் தன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் சோனு  நடித்த படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்து இருப்பார். அப்போது சோனு அவர்களை ஹீரோ அடிப்பது போல காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை பார்த்து அந்த சிறுவன் கோபமடைந்து தன் வீட்டு டிவியை உடைத்து விட்டானாம். இதுகுறித்து தெலுங்கு சேனலில் செய்தி வெளியாகியது. அந்த செய்தியை பார்த்து சோனு டிவிய உடைக்காதீங்க. புது டிவி வாங்கி கொடுங்கள் என்று அவர் தந்தையிடம் கேட்கப் போகிறான் அந்த சிறுவன். என்று நக்கல் அடித்துள்ளார். மேலும் இந்த கமெண்ட்டுக்கு  சோனு ரசிகர்கள் சார் இனி நீங்க ஹீரோவா நடிக்கிறதை தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். வில்லனாக இல்லை. என்றும் கமெண்ட் செய்து உள்ளனர். மேலும் சோனுவின் கமெண்டுக்கு அவரின் ரசிகர்கள் பல விதமான ரிப்ளை அளித்து வருகின்றனர்.