தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…

Photo of author

By Sakthi

தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…

Sakthi

Updated on:

 

தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…

 

தமிழ் சினிமாவில் மாவீரன், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தற்பொழுது தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

 

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் நடிகர் சுனில் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2, ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், குண்டூர் காரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர் சுனில் அவர்கள் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்திலும், நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை அஞ்சலி நடித்து வரும் ஈகை திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் தெலுங்கு நடிகர் சுனில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவருடைய தம்பி எல்வின் இருவரும் இணைந்து புல்லட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் நடிக்கும் இந்த புல்லட் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் அவர்களும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை போஸ்டர் ரிலீஸ் செய்து அறிவித்துள்ளது.