சேலத்தில் இடி தாக்கி சேதமடைந்த கோவில்! சாமி குத்தம் என அச்சப்படும் பொதுமக்கள்!
மே மாதம் முடிந்தும் சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மன்னர் வளைகுடா பகுதிகளில் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு கிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.அதனடிப்படையில் சேலம் ,திருநெல்வேலி, திருச்சி, திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, ஈரோடு, கரூர் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்கள் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று தெரிவித்தனர்.
அதன்படி நேற்று மாலை முதல் சேலத்தில் லேசாக மழை பிடிக்க தொடங்கியது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அவ்வாறு மழை பெய்து வரும் சேலம் மாவட்டத்தில் ,மேட்டூர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மேட்டூரில் ரெட்டியூர் என்ற பகுதியில் சக்தி மாரியம்மன் என்ற கோவில் உள்ளது. நேத்து கனத்த மழை பெய்ததையோட்டி இந்த கோவிலின் கோபுரத்தின் மேல் இடி விழுந்தது. இடி விழுந்ததில் கோவிலின் கோபுரத்தில் இருந்த சில சிலைகள் சேதம் அடைந்தது. மேலும் சில சிலைகள் சுக்குநூறாக உடைந்து கீழே விழுந்தது. இதனை கண்ட மக்கள் ஊருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ கெட்ட சகுனம் என்று எண்ணி மறுநாள் காலையில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். கோபுரத்தின் மேல் இடி தாக்கியதால் தெய்வக்குற்றம் என எண்ணி அவ்வூர் மக்கள் பரபரப்பாக உள்ளனர்.