கோவில் திருவிழா 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 

Photo of author

By Amutha

கோவில் திருவிழா 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 

கோவில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி 37 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா, நாளை 10ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் செடல் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த திருவிழாவின் போது புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவின் போது செடல் அணிந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.

இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கரக உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும்,  அபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.

இன்று முத்துப்பல்லக்கு உற்சவமும் நாளை செடல் திருவிழாவும் நடக்க இருக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து  செய்து வருகின்றனர்.

நாளை செடல் திருவிழா என்பதால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரும்பாலான மக்கள் இந்த கோவில் பகுதியில் கூடுவர். எனவே 37  அரசுப் பள்ளிகளுக்கு நாளை 10-ஆம் தேதி விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.