திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!
சமீப காலமாக கோயில்களின் கொள்ளையடிப்பது அதிகரித்து விட்டது. கோவில்களில் உள்ள சிலையை திருடுவது, உண்டியலை உடைத்து அதில் உள்ள பணம், நகைகளை எடுப்பது சற்று அதிகரித்து வண்ணமாக தான் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே தங்க முலாம் பூசிய கலசம் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து தற்போது திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அழகு சேனை கிராமத்தில் ஸ்ரீ தர்மராஜா ஆலையம் உள்ளது.அந்த ஆலயத்தில் உள்ள கோபுர கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஒன்பது கலசங்களையும் திருடி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.