என்னது காலி பாட்டில் கொடுத்தா பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய நடவடிக்கை!
தமிழகத்தில் 5300 டாஸ்மார் கடைகள் இயங்கி வருகின்றன.இதையொட்டி வேலூர் வனபகுதியை ஒட்டிஉள்ள டாஸ்மார்க் கடைகளில் லேபில் ஒட்டி உள்ள காலி பாட்டில்களை கொடுத்தா பத்து ரூபாய் என அறிவித்தது.இதில் 15 முதல்25 சதவீதம் மலைவாஸ்தலத்திலும் வனப்பகுதிலும் ஒட்டியே அமைத்துள்ளன. பிறகடைகள் ஊர் ஒதுக்கு புறத்திலோ கிராமங்கள் ஒதுக்கு அமைத்துள்ளன. இங்குவரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி குடித்துவிட்டு அப்டியே போட்டுசெல்கின்றனர்.
இதனால் வனவிலங்குகள் மிகவும் பாதிப்படைகின்றன. இதுமட்டும் அல்லாமா பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வனவிலங்கை பாதிப்படைய செய்கின்றனர்.கிராமபுறங்களில் வயல்வெளிகளில் வீசப்படுவதால் விவசாயம் பெருமளவு பாதிப்படைகிறது.இதனால் மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதனால் மது வாங்கவரும் மது பிரியர்கள் பாட்டிலுடன்சேர்த்துபத்து ரூபாய் வசூலிக்கப்படும்.மது குடித்த பின்னர் காலி பாட்டில்களை லேபிள் இருக்கும் மூடியோட குடுத்தால் பத்து ரூபாய் மது பிரியர்களுக்கு கொடுக்கப்படும்.அப்படி தராத மது பிரியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பத்து ரூபாய் மீண்டும் டாஸ்மார் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.அதேபோல் மது பிரியர்கள் குடித்த காலி பாட்டிலை ஸ்டிக்கர் எடுத்து டாஸ்மார் பணியாளரிடம் கொடுத்தால் பத்து ரூபாய் பெறலாம்.
இதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பும் பெருமளவு குறையும்.எனவே இந்ததிட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பீமகுளத்தில் ஒருகடையும்,சேலம் மாவட்டத்தில் மூன்று கடையும்,நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் இரண்டு கடைகளும்,வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் ஒரு கடையும் திருவண்ணமலை மாவட்டத்தில் ஜம்னாமரத்தூரில் ஒரு கடையும் காணப்பட்டுள்ளது. எனவே அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் மாவட்ட ஸ்டிக்கர்களை சேர்த்து அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.