பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது!

Photo of author

By Hasini

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது!

காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் அனிதா. 45 வயதான இவர் திருமணம் ஆகாதவர். மேலும் இவர் தனது அக்கா வீட்டிலேயே தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேல் போர்ஷனில் இவரும், கீழ் போர்ஷனில் அக்கா குடும்பத்தினரும் தங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இவர் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 9ஆம் தேதி இரவு அனிதா அவரது அக்காவிற்கு போன் செய்து எனக்கு பயமாய் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர்கள் பதறிப்போய் மேலே ஏறி வருவதற்குள் அறை உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.அதனை தொடர்ந்து கதவை உடைத்து பார்த்த பொது ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

பிரேத பரிசோதனையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அதன் பிறகு அனிதாவின் அறையில் இருந்த நெல் மணிகளை வைத்து இவர் தான் கொலையாளி என்பது போல் காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சுதாகர் என்பவரை போலீசார், தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

போலீஸ் நிலையத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி விசாரணை மேற்கொண்டனர். அவரை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. உயிரிழந்த அனிதாவும் உடற்கல்வி ஆசிரியர் சுதாகரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது, அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கள்ளக்காதல் தொடர்ந்த நிலையில் தன்னை திருமணம் செய்ய சுதாகரை அனிதா வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தினால் அனிதாவின் தாடை மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியாக கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாக அனிதா பலியாகியுள்ளார்.

அந்த சுதாகர் சொத்து மதிப்பு மட்டும் 50 லட்சத்திற்கு மேல்  இருக்கும் என தெரியவந்தது. அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் அனிதாவை காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் ஒரு அரிசி மண்டியும் வைத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. அனிதா திருமணத்திற்கு அவரை வற்புறுத்தி அதன் காரணமாக ஆத்திரம் மேலிட அவரை கொலை செய்துள்ளார்.

அவருக்கு சொத்து இவ்வளவு இருக்கும் பட்சத்தில் ஆசிரியையுடேன் பழகும் விதத்திலேயே உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் அவர்களுக்குள் இருந்த காதல் யாருக்கும் தெரியவில்லை. அங்கே சில நெல் மணிகளும் சிதறிக்கிடந்தன அந்த சுதாகரின் சட்டை பையும் இருந்தது. அதை வைத்து போலீசார் அவரை விசாரித்த போது அவர் இவ்வளவு உண்மைகளையும் கூறினார். கொலை நடந்த இரவான 9ஆம் தேதி இரவு அனிதா அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் திரும்பவும் திருமணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டபோது, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தினால் தாக்கி விட்டுள்ளார். சுதாரித்த அனிதா பயத்தின் காரணமாக கதவை தாழிட்டுக் கொண்டு அவரது அக்காவிற்கு போன் செய்த நேரத்தில் சமயம் பார்த்து இந்த சுதாகர் தப்பிவிட்டார்.

இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை கைது செய்து போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.