மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு! பணிகள் விரைவில் தொடக்கம்!

Photo of author

By CineDesk

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு!  பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியுடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ,மு.க.ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், 600 கோடி ரூபாய் செலவில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் 10000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறினார்.

மேலும் மதுரையை அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மாற்றும் வகையில், டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து முன்னோடி டைடல் பார்க் நிறுவப்பட்டு, இது டைடல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும். மதுரை மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா காட்டப்படும் என தெரிவித்தார்.

டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதை பற்றி ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். முதற்கட்டமாக 600 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஏக்கரில் இது அமைக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும். இந்த டைடல் பார்க் மூலமாக 10000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

கட்டுமான வரைபடம் தொடர்பான பணிகள் உறுதியாகியுள்ளது. டெண்டர் விடுவதற்கான பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்ட நிலையில், மதுரையில் அமையவுள்ள டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.