ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

0
182

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க..!? – ஷாக் ஆன ரசிகர்கள்.

பொதுவாக ஒரு பட டீசர்னா, அது வர்ற வெள்ளிக்கிழமை வருது, வர்ற அமாவாசைக்கு வருதுன்னு ஒரு பில்டப் பண்ணி ரிலீஸ் பண்றதுதானே உலக வழக்கம். ஆனா இந்தப் பட டீசரை அப்படி ரிலீஸ் பண்ணலை.

ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை 17, 2020 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.

படத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உளவு பார்ப்பவர்களைப் பற்றிய அறிவியல் புனைவு கலந்த கதை என்று சொல்லப்படுகிறது. மேலும், கால நேரத்தை வைத்து நோலன் வழக்கமாகக் கையாளும் குழப்பும் விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு, ’ஹாப்ஸ் அண்ட் ஷா’ படத்தின் காட்சிக்காக வந்திருந்த சில ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென, ’டெனெட்’ படத்தின் டீஸர் திரையிடப்பட்டது. இந்த டீஸர் இன்னும் இணையத்தில் வெளியாகவில்லை.

ஜான் டேவிட் வாஷிங்டன் என்கிற கதாபாத்திரம் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த கண்ணாடியை பரிசோதிப்பது போல ஒரு காட்சி, அவர் பிராண வாயுவுக்கான மாஸ்க்கை அணிந்திருக்கும் காட்சி, ஸ்வாட் குழு ஆயுதங்களோடு ஓடும் காட்சி ஆகியவை இந்த டீஸரில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம், தனது படத்தின் திரைக்கதை மட்டுமல்லாமல், புரோமோஷன்களையும் வித்தியாசமாக செய்பவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கிறார் நோலன்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleவாக்கு எண்ணும் இடத்தில் திடீர் பரபரப்பு! என்ன நடக்கிறது! வேலூர் தேர்தலில்?
Next articleகோபத்தில் அமித்ஷா !கொந்தளிப்பில் எடப்பாடி ! !கிளுகிளுப்பில் துரைமுருகன்!!!