எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

Photo of author

By Hasini

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

Hasini

Tension again in the border area! Excitement over the information given by the army officer!

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

நமது இந்திய எல்லை  பகுதிகளில் ஏதோ ஒரு நாடு தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சீனா பிரச்சினை செய்கிறது என்றால், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நடந்து முடிந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உடனான நட்புறவில் இருந்து விலகி அதற்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்த இரண்டு நாடுகளும் தீவிரத்தையும், போரையும் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் போதும், காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ, 140 பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக, இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது ராணுவ வீரர்களை பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 பயங்கரவாதிகள் ஊடுருவல் தயாராக இருப்பதை ராணுவம் உற்றுநோக்கி கவனித்து வருகிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காஷ்மீருக்குள் ஊடுருவலாம் என்ற தகவலால், மிகவும் உஷாரான நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர். பயங்கர தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் உயரமான பகுதிகளில் தங்கி இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் காஷ்மீர் மக்களையும் வன்முறைக்கு தூண்டி வருகிறார்கள் என்றும், அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்