தெறி பேபி கம்மிங் சூன்!! விஜய் டிவியின் ஆட்டம் ஆரம்பம்!!

Photo of author

By CineDesk

தெறி பேபி கம்மிங் சூன்!! விஜய் டிவியின் ஆட்டம் ஆரம்பம்!!

விஜய் தொலைக்காட்சியில் பொதுவாக சீரியல் மட்டுமின்றி பல பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும். ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும். உதாரணமாக விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகள் உலக அளவில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக அண்மையில் ஃபேமஸான நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி. இது முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சமையல் நிகழ்ச்சி. இது மட்டுமின்றி விஜய் டிவியில் அவ்வபோது சில நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் விஜய் தொலைக்காட்சி சீரியல் பிரபலங்கள், தொலைக்காட்சியின் காமெடி பிரபலங்கள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சி அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும். மேலும் பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற சிறப்பு நாட்களில் தொலைக்காட்சியின் பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி அதில் ஃபன் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகருமான ரக்க்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்று செய்துள்ளார். அதில் அண்மையில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் கம்மிங் சூன் என்று கேப்சனையும் வைத்துள்ளார். அவர் புகைப்படத்தில் பின்புறத்தில் தெறி பேபி என்ற வார்த்தை குறிப்பிட்டுள்ளது.

இதை பார்க்கும் பொழுது பக்ரீத் அல்லது ஆயுதபூஜைக்கு ஏதாவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் இதுகுறித்து என்னும் விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு ப்ரோமோகளையும் வெளியிடவில்லை. மேலும் ரக்க்ஷன் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வீ ஆர் வெயிட்டிங் என்ற கமெண்ட்டினை தெறிக்க விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.