பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி…

0
171

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி…

பாகிஸ்தான் நாட்டில் டீசல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது பயணிகள் சென்ற பேருந்து மோதியதில் பரிதாபமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் பகுதிக்கு இன்று(ஆகஸ்ட்20) அதிகாலை 4 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நேர் எதிரே டீசலை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியதில் தீ பிடிக்க லாரியில் இருந்த டீசல் டேங்குகள் வெடித்து சிதறியது. இதில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்து குறித்து காவல் துறைக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் பேருந்தில் சிக்கிய பயணிகள் அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடந்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தற்பொழுது நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleகல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…
Next articleஎன் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…