கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…

0
36

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசியதை அடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியில் பல சாதனைகளை புரிந்து வருகின்றது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னர் அதாவது ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இமயமலை புறப்பட்டு சென்றார். நான்கு ஆண்டுகள் கழிந்து தற்பொழுது இமையமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பயணத்தின் ஒரு பகுதியாக ஜார்கண்ட் கவர்னர் அவர்களை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் உத்திரப்பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்திர பிரதேச மாநிலம் துணை முதல்வர் அவர்களுடன் ஜெயிலர் திரைப்படம் பார்த்தார். பிறகு உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்தயநாத் அவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்20) உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்து பேசினார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு குறித்து சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “இதயங்கள் சந்தித்தப் பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் பொறியியல் கல்லூரியில் நான் படிக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் மனதில் அப்படியே இருக்கின்றது. நாங்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தோம். அன்று முதல் இன்று வரை நல்ல நண்பர்தளாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.