சத்திஸ்கரில் பயங்கர தாக்குதல்! 11 வீரர்கள் வீர மரணம்! 

Photo of author

By Vijay

சத்திஸ்கரில் பயங்கர தாக்குதல்! 11 வீரர்கள் வீர மரணம் .
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ படையைசேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். அரன்பூர் அருகே டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்கள் அணைவரும் டிஆர்பி எனப்படும் காவல் பிரிவை சேர்ந்தவர்கள். இன்று காலை தங்களது ரோந்து பணிகளை முடித்து கொண்டு ராணுவ வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
வீரர்கள் வந்த வாகனத்தை மாவோயிஸ்டுகள் ஐஈடி வகையை சார்ந்த வெடிகுண்டினை, வாகனத்தின் மீது வீசியதில் 10 வீரர்கள் மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இறந்தனர்‌. இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ராணுவ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாதலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் பூபேஷ் பாதல் கூறுகையில், தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் தற்போது ராணுவ படையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசிடம் இருந்து தப்பிக்க முடியாது, மாவோயிஸ்டுகளுக்கான போராட்டம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, இதில் அணைவரும் அடியோடு ஓழிக்கப்படுவார்கள் என கூறினார்.