இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ?
இன்று பூமியை ஒரு விண்கல் நெருங்கிக் கொண்டிருப்பதால் என்ன நடக்கப் போகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நமது பூமி இருக்கும் சூரிய குடும்பமானது வானவெளியில் ஏராளமான ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. சூரியனைச் சுற்றி கோள்களும் குறுங்கோள்களும், துணை கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
இந்த சூரியனைச் சுற்றி வரும் சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தின் எச்சங்கள் மற்றும் விண்கற்கள் பல நூறு கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது.
இதையடுத்து, 488453 (1994 XD) மற்றும் 2020 DB5 என அழைக்கப்படும் இரண்டு விண்கற்கள் பூமிக்கு அருகில் நெருங்கி வர இருக்கின்றன. ஜூன் 15 அன்று அதாவது இன்று பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டின் விட்டமும் 150 கிலோமீட்டருக்கும் மிக அதிகமாக இருப்பதால் இவை மிகவும் அபாயகரமானவையாக கருதப்பட்டுள்ளன.
இந்த இரண்டு விண்கற்களின் சுற்றுப்பாதையானது தீர்மானிக்கப்பட்டவுடன், விஞ்ஞானிகள் அதிநவீன கணித மாதிரிகள் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீடுகளைப் பயன்படுத்தி அதன் எதிர்காலப் பாதையை கணிக்கின்றனர். அதில், அவைகள் பூமியை நெருங்குவதற்கான வாய்ப்பு மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றைக் துல்லியமாக அனுமானிக்கின்றனர்.
இதில் 2020 DB5 என்ற விண்கல்லானது ஜூன் 15 அன்று பூமிக்கு அருகில் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 43,08,418 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 34,272 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த விண்கல் இறுதியாக 1995 ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் வந்திருந்தது.
இந்த சூழ்நிலையில் ஜூன் 15ஆம் தேதி விண்கல் பூமியை நெருங்கிய பிறகு, வருகின்ற 2048 ஆம் ஆண்டு வரையில் வேறு எந்த விண்கல்லும் பூமியை நெருங்க வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டுள்ளது.