பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து!!

தமிழ்சினிமாவில் புதிய வார்ப்புகள் படத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகமான 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரதி.

இவருடைய இயற்பெயர் அக்னிஹோத்ரி. தனது படங்களில் நடிக்கும் நடிகைகளின் பெயர்களை ர  அகரவரிசையில்  மாற்றுவதே பாரதிராஜாவின் வழக்கம் . அவ்வாறே ராதிகா, ரேகா ரேவதி, ராதா இவர்களை தொடர்ந்து ரதி என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது.

பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்  ரதி, தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என பிற மொழிகளிலும் ஜொலித்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவனை விட்டு பிரிந்த நடிகை  ரதிக்கு, தனுஜ் விர்வானி  என்ற மகன் உள்ளார். இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையில் ரதியும் அவருடைய மகனும் ஒர்லி பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்பு தளத்தில் வசித்து வந்த நிலையில் திடீரென்று அந்த குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து!!

இதை அறிந்த தீயணைப்பு துறையினர் எட்டாவது மாடி வரை மட்டுமே செல்ல முடிந்த நிலையில் ரதி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்த வீரர்கள் பத்தாவது மாடியில் சிக்கித்தவித்த பத்துக்கும்  மேற்பட்டவர்களை  மீட்டுள்ளனர்.

இதுபற்றி நடிகர் தனுஜ் விர்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:  என்னுடைய அம்மா தற்போது போலந்து நாட்டில் இருக்கிறார் என்றும் நான் லோனாவாலாவில் உள்ள பண்ணை வீட்டில்  இருக்கிறேன் என்றும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்றும்பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து!!

பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காப்பாற்றுவதற்காக எங்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவை தீயணைப்பு வீரர்கள் உடைத்து அக்கம்பக்கத்தினரை காப்பாற்றியுள்ளனர், தற்போது அனைவரும் நலமாக உள்ளனர் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment