எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!

Photo of author

By Hasini

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!

Hasini

Terrorist attack on the border! So far 8 players have been killed!

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!

பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லையை ஒட்டிய பயங்கரவாத தாக்குதலில், அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பல்வேறு பகுதிகளிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதிகளில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் என்றும் தெரிவித்து உள்ளனர்.
ராணுவம் பதிலடி கொடுத்து இதனை முறியடித்து உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ரோந்து பணியில் 4 போலீஸ் கான்ஸ்டபிள்களும்,  அதே போல் மற்றொரு இடத்தில், வடக்கு வசீரிஸ்தானில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 2 வீரர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதுவரை 8 பேர் கொல்லப்பட்டு, 12 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளனர்.