பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூக்கு வந்த சோதனை!! 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதை சந்தித்தது இல்லை!!

Photo of author

By Savitha

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூக்கு வந்த சோதனை!! 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதை சந்தித்தது இல்லை!!

வாரிசு படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தில் ராஜூ அவர்கள் சாகுந்தலம் படத்தின் தோல்வியை பற்றி பேசியுள்ளார்.

நடிகை சமந்தா, நடிகர் தேவ் மோகன் இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் டித்து வெளியான திரைப்படம் சாகுந்தலம். இந்த திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

புராதனகால வரலாற்று படமாக உருவாகி வெளியான சாகுந்தலம் திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. சாகுந்தலம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பும், நல்ல கருத்துக்களும் கிடைக்கவில்லை. இதனால் படத்தை தயாரித்த தில் ராஜூ அவர்கள் சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தயாரித்து பெரிய வெற்றியை பெற்ற தில் ராஜூ அவர்கள் தற்போது சாகுந்தலம் படத்தை தயாரித்து மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்த தோல்வி குறித்து தில் ராஜூ அவர்கள், “என்னுடைய 25 கால சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை. சாகுந்தலம் படத்தின் முன்னோடக் காட்சி வரை எனக்கு இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் என்னுடைய கணக்கு மொத்தமும் தவறாக போய் விட்டது” என்று கூறியுள்ளார்.