தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 84% பேருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பாதிப்புள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்பரவலை தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் முதலில் தோன்றிய போது அறிகுறிகள் அடிப்படையில் நோயாளிகள் கண்டறியப்பட்டார்கள். ஆனால் தற்போதோ எந்த அறிகுறியுமில்லாமல் கொரோணா தொற்று பரவி வருகிறது.
இது தொடர்பாக அவர் “தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், 88 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்படுவோரில், வயதானோர், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட, நாள்பட்ட நோய் பாதிப்புள்ள, 84 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தவிர்க்க அவர்கள், உரிய நேரத்தில், மாத்திரைகள் சாப்பிட்டு, தனிமைப்படுத்திக் கொண்டு, கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.