து. முதல்வராக பதவி ஏற்கப்போகும் உதயநிதி.. அமைச்சரவையில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! 

Photo of author

By Rupa

து. முதல்வராக பதவி ஏற்கப்போகும் உதயநிதி.. அமைச்சரவையில் வரப்போகும் அதிரடி மாற்றம்!!

தமிழக அமைச்சரவையில் இன்று பல மாற்றங்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுக என்றாலே வாரிசு அரசியல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதன் பணிகளை ஸ்டாலின், ஆட்சி அமைத்ததிலிருந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். முதற்கட்டமாக உதயநிதியை இளைஞர்கள் அணி செயலாளராக உள் நுழைத்த தற்பொழுது அமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக துணை முதல்வர் பதவிக்கு உதயநிதியை தயார் படுத்தியும் வருகிறார். இது குறித்து தான் அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் மருத்துவ ரீதியான சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவிற்கு பிறகு வெளிநாட்டிற்கு செல்வதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் முதல்வர், அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறாராம். சில அமைச்சர்களின் இலக்காக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பாக துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்த்த அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையே அவரது கட்சி நிர்வாகிகள் விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

இது குறித்து ஆலோசனை செய்ய முன் தினம் ஸ்டாலின் வீட்டில் மூத்த தலைவர்கள் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சமீப காலமாக, திமுக மீது சட்ட ஒழுங்கு பிரச்சனை என்ற குற்றச்சாட்டு ஆழமாக பதிந்துள்ளது. இதனை நீக்கிய ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப் போவதாகவும் இதன் முந்தைய செயல்பாடுகளாக 25 ஐஏஎஸ் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.