துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்!

Photo of author

By Parthipan K

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்!

Parthipan K

Thadhavu movie release date release! New update released by the producer!

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்!

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகரில் ஒருவர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் தற்போது நடித்து வரும் படம் தான் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த படத்தின் இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர்,இவர்கள் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.மேலும் இந்த துணிவு திரைப்படமானது வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் டிரெய்லர் சமீபத்தில் தான் வெளியானது.வெளியான உடனே அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று மாலை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.மேலும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் வரும் ஜனவரி 15 தேதி பொங்கல் திருநாளில் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் துணிவு படத்தை பற்றி தயாரிப்பாளர் போனி கபூர்  டுவிட் செய்துள்ளார்.

அதில்  துணிவு படம் வரும் ஜனவரி 11 தேதி அதாவது புதன்கிழமை வெளியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.