தை திருநாள் உற்சாக வரவேற்பு போகிபண்டிகை கொண்டாட்டம்! சென்னையில் அதிகளவு காற்று மாசு பதிவு!
தமிழர்களுக்கே உரிய பண்டியான பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.அதனையடுத்து இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதானால் வெளியூர்களில் இருபவர்கள் பொங்கல் பண்டியை அவரவர்களின் சொந்த ஊரில் கொண்டாட இருபதினால் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களின் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாளை தை பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிபண்டிகை கொண்டாடி வருகின்றனர்.போகி பண்டிகையின் பொழுது மக்கள் அனைவரும் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக சென்னை, மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் விதமாக பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர்.
அதனால் சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாக நடனமாடி வருகின்றனர். இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு 100- ஐ தாண்டியுள்ளது.இதற்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.