பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

Photo of author

By Parthipan K

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

Parthipan K

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது.

1950 ஆம் ஆண்டு வெளியான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெகுஜன இலக்கியத்தில் ஆல் டைம் கிளாசிக் நாவலாக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் கைவிட்டனர். அதன் பின் மணிரத்னம் இரு முறை முயற்சி செய்து பட்ஜெட் காரணமாக கைவிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவின் பல மொழிகளில் திறமையான நடிகர்களை உள்ளடக்கி படத்தை ஆரம்பித்தார்.

இதையடுத்து நட்சத்திர பட்டாளத்தோடு தாய்லாந்தில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பை நடத்தினார் மணிரத்னம். அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து படக்குழு இந்தியா திரும்பியுள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தெரிகிறது. அதற்கான திட்டமிடல் மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகள் சம்மந்தமான ஆலோசனை இப்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் அனைவரும் இந்த இடைவேளையில் தங்களின் வேறு வேலைகளைக் கவனிக்க உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்துக்காக நடிகர் நடிகைகள் தங்கள் உடல் தோற்றங்களை மாற்றிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.