அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானை வழிபட உகந்த நாளான தைப்பூசத் திருநாள் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி(தை 29) அன்று வருகிறது.பூச நட்சத்திரம் பௌர்ணமி ஒன்று சேர்ந்து வரும் நாளை தான் நாம் தைப்பூசம் என்று கொண்டாடி வருகின்றோம்.
இந்த தைப்பூசம் தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் நாளாக பார்க்கப்படுகிறது.சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் வென்ற தினத்தை தை பூசமாக கொண்டாடி வருகிறோம்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில் தான் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தை பூசத்தில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர்.தீவிர முருக பக்தர்கள் காவடி எடுப்பது,அளவு குத்துவது,தீ நடைபயணம் மேற்கொள்வது போன்ற நேர்த்திக்கடனை செய்கின்றனர்.
நாம் வாழ்வில் உள்ள குறைகள்,துன்பங்கள்,தடைகள் அனைத்தையும் நீக்கும் நாளாக தைப்பூசம் கருதப்படுகிறது.பழநி மலையின் அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நடத்தப்பட்டு பத்து நாட்கள் வரை தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.
தை 28 மாலை 6 மணிக்கு பௌர்ணமி திதி தொடங்கி மறுநாள் தை 29 மாலை 6:34 மணிக்கு முடிவடைகிறது.முருக பக்தர்கள் 48 நாட்கள் அல்லது 21 நாட்கள் விரதம் இருந்து சாமி தரிசம் செய்கின்றனர்.
இப்படி முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் சில விஷயங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.முதலில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு தலைக்கு நீராட வேண்டும்.பிறகு நெற்றியில் திருநீறு இட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
பிறகு முருகனுக்கு உகந்த நெய்வேதியம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.பிறகு பூஜை அறையில் அமர்ந்து கந்தசஷ்டி கவசம்,திருப்புகழ்,கந்தசஷ்டி கவசம்,கலிவெண்பா போன்ற முருகனுக்கு உகந்த பாடல்களை படிக்க வேண்டும்.
விரதம் இருக்கும் பக்தர்கள் காலை மற்றும் மதிய நேரத்தில் பால் மற்றும் பழம் சாப்பிடலாம்.அதன் பிறகு மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடலாம்.உடல் நலப் பிரச்சனை இருப்பவர்கள் மூன்றுவேளையும் உணவு சாப்பிட்டு விரதம் கடைபிடிக்கலாம்.