தமிழ் கடவுள் முருகப் பெருமானை வழிபட சிறப்பான நாள் தைப்பூசம்.இது வருகின்ற 29 ஆம் தேதி அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி வருகிறது.பூச நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி ஒன்றாக வரும் நாளில் இந்த தை பூசம் கொண்டாடப்பட இருக்கின்றது.தை என்றால் தமிழ் மாதத்தையும் பூசம் என்றால் நட்சத்திரத்தையும் குறிக்கிறது.
இந்த தைப்பூச நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக திகழ்கிறது.இந்நாளில் பழனிக்கு சென்று முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.இந்த தைப்பூச நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருக்கிறது.இந்நாளில் காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் முருகனை வணங்கலாம்.
சிறப்புமிக்க தைப்பூச நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கோடி புண்ணியம் தங்களை வந்து சேரும் என்பது ஐதீகம்.முருக பக்தர்கள் 48 நாட்களுக்கு விரதம் இருந்து தைப்பூச நாளில் முருகனை வணங்குவார்கள்.
வாழ்வில் துன்பங்களை மட்டுமே பார்த்து வருபவர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் இனி நன்மைகள் மட்டும் தான் நடக்கும்.திருமணத் தடை உள்ளவர்கள் தைப்பூச நாளில் விரதம் இருந்து மனதார முருகனை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
தைப்பூசம் ஆரம்ப நாள்:
பௌர்ணமி திதி ஆரம்ப நாள் மற்றும் நேரம்: பிப்ரவரி 10 மாலை 6 மணி
பௌர்ணமி திதி முடியும் நாள் மற்றும் நேரம்: பிப்ரவரி 11 மாலை 6:34
தைப்பூச விரதம் இருப்பது எப்படி?
இந்த நாளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.பிறகு வீட்டின் முன் கோலமிட்டு மஞ்சள் பிடித்து வைக்க வேண்டும்.
பிறகு பூஜை அறையில் உள்ள முருகப்பெருமான் திருவுருவப்படத்தை அலங்கரித்து முருகனுக்கு உகந்த நெய் வேதியத்தை படைக்க வேண்டும்.அதன் பிறகு பூஜை அறையில் அமர்ந்து முருகருக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
பிறகு பால் மற்றும் பழம் உட்கொண்டு விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.பிறகு மாலை நேரத்தில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு விரதத்தை முடிக்கலாம்.இப்படி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமண தடை விலகி வரன் கிடைக்கும்.