தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

0
160

தைப்பூச நாளன்று பொது விடுமுறை என்று அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ் கடவுளாகிய முருகனை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா மிக முக்கியமானது. இந்த விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இலங்கை. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேசியா, போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூச நாளன்று பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பதே முருக பக்தர்களின் நீண்டகால கோரிக்கைகள் ஒன்றாக இருந்து வருகிறது. முருகனை தமிழ் நிலத்தின் கடவுள் என்று வணங்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தைப்பூசத்திற்கு விடுமுறை விட வேண்டும், என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் வெளியிட்டியிருக்கின்ற அறிவிப்பில் நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, இலங்கை, மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து வரும் ஜனவரி மாதம் 28ஆம் தேதி அன்று கொண்டாடப்படும், தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கவும், இனி வரும் வருடங்களில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் இணைக்கவும், நான் உத்தரவிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

Previous articleமுதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!
Next articleபிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!