தல அஜித்தின் புது அப்டேட்!! தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

0
132

 

தமிழ்நாடு முழுவதும் தல அஜித் ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர்.தல என்ற இரு எழுத்து இந்த தமிழ்நாடு முழுவதும் கைதட்டலுக்கும் பாராட்டிற்கும் பெருமைக்கும் உரியதாய் விளங்குகிறது. ஏனெனில் இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர் ஆவார்.

எவருடனும் பாகுபாடின்றி பழகும் விதமும் குழந்தை தனமான சிரிப்பும் கடின உழைப்பும் இவரை தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியாக மாற்றியது.  நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே டீமுடன் வலிமை என்ற படத்தில் நடித்து வந்தார். கொரோனா பேரிடர் காரணமாக இப்படமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தல அஜித் எப்போதுமே தனது சினிமா வாழ்க்கையையும் பர்சனல் லைப் ஐயும் பிரித்தே வைத்துள்ளார். இவற்றை மிக அழகாகவும் பேலன்ஸ் செய்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் தனது விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார் என்றே கூறலாம் இவரின் multi-talented ஸ்கில்ஸ் தல ரசிகர்களை பெருமைக்குரியவர்கள் ஆக்குகிறது. ஏனெனில் இவர் சமையல் ஸ்பெஷலிஸ்ட், போட்டோகிராஃபர்,

ஏரோ மாடலிங் என பல திறமைகளை தன்னுள் இருந்து வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு தனது திறமைகளில் ஒன்றான மற்றொன்றையும் வெளிக் கொண்டு இருக்கிறார். அது என்னவென்று பார்ப்போமா?

அதுதான் கர்டனிங்.அவர் தனது வீட்டின் பின்னால் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து அதில் அதிக கவனம் செலுத்தி உள்ளாராம். எல்லா வேலைகளையும் அந்த தோட்டத்திற்கு தானே செய்துள்ளாராம்.

75 வீதமான பூக்களையும் மூலிகைச் செடிகளையும் வளர்த்து, சில மணி நேரம் தினமும் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது வீட்டில் செடி ஒன்றை நடும் வகையில் போட்டோ வெளியிடப்பட்டிருந்தது நெட்டிசன்கள் பெருமளவில் பேசப்பட்டும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் வந்தது.

தற்போது தல ரசிகர்கள் அவரது கார்டன் போட்டோவை காண ஆவலுடன்  தவமாய் காத்துகொண்டு இருக்கின்றனர் என்றே கூறலாம்.

எப்படியோ கிரீன் இந்தியாசேலஞ்ச் தல வீட்லயும் சைலண்டா வேலையை காட்டி இருக்கே!

Previous articleதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !
Next articleதமிழில் இப்படி ஒரு படம் நடிக்க ஆசை! ரசிகர்களின் கேள்விக்கு ட்வீட் போட்ட மலையாள முன்னணி நடிகர் !