தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.  போனி கபூர் தயாரிப்பில் இவர் நடித்துக் கொண்டிருந்த வலிமை படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தல அஜித்தின் வலிமை படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படக்குழுவினருடன் இயக்குனர் வினோத் பேசிக்கொண்டிருக்குமாறு போட்டோ வெளியானது.

இந்த சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தும் சேர இருப்பதாகவும் சுமார் பதினைந்து நாட்கள் அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் படம் இந்த வருட இறுதிக்குள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து தல ரசிகர்கள் அவருடைய வலிமை படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.