எதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்

0
232

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி இந்த படத்திற்கு ’அண்ணாத்த’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் டைட்டில் குறித்த ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய டைட்டிலுடன் கூடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறா.ர் டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleகேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!
Next articleடெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?