தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு தற்போது அந்த திரைப்படம் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது.இந்த படத்திற்கு தலைவி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.இந்த திரைப்படம் தமிழ்,ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.இந்தத் திரைப்படத்தை பிரபல தமிழ் இயக்குனரான ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார்.ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சுவாமி நடித்துள்ளார்.மேலும் நாசர்,சமுத்திரக்கனி,தம்பி ராமையா,பூர்ணா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்தத் திரைப்படத்தை விபரி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் உள்ளது.தமிழக அரசியலில் பெரும் ஆளுமையாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழக மக்களுக்கு முழுமையாகத் தெரியும் என்றாலும் அதனைத் திரையில் காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதனிடையே படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் படக்குழு தலைவி படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சில மாதங்களாக திரையரங்கம் திறக்கபடாத நிலையில் தற்போது திரையரங்கத்தை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதனால் தலைவி படத்தை செப்டம்பர் 10ம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தலைவி திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா அ.தி.மு.க கட்சியாக இருந்தாலும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் அவர் மீது மரியாதையை வைத்துள்ளனர்.அவரின் நிர்வாகத் திறமையை பாராட்டாத நபர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்.