’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

Photo of author

By CineDesk

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

CineDesk

Updated on:

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்துவரும் அடுத்த படமான ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு 21 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பொறியியல் கல்லூரியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் முன்னாள் மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் காட்சியை படமாக்கி வருவதாகவும் தெரிகிறது. மேலும் டெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 25 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

bigil audio launch vijay speech problem
bigil audio launch vijay speech problem

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட உள்ளதாக ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த வதந்தியை தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ என்பவர் தனது டுவிட்டர் தளத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வதந்தி முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட்து

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய பணி ஒன்றை செய்து கொண்டிருக்கும் லலித் என்பவர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக மாறி உள்ளதாகவும், அவருடைய சிறந்த பணியை பாராட்டி விஜய்யே அவரை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக சேர்த்து கொண்டதாகும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தளபதி 64 படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த வதந்தியை விஜய்யே உண்மையாக்கிவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.