தளபதி 65 படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இணையதளத்தில் வைரலாகும் தளபதி 65 படத்தின் அப்டேட்!!
கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல கட்டுபாடுகளை விதித்திருந்தனர். இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பல சரிவுகள் காணப்பட்டது. கொரோனா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் அன்று நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன மாஸ்டர் திரைபடம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பெருமளவில் லாபத்தை எட்டியது.
இந்த நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 65 வது பட தகவல்கள் கடந்த வருடமே வெளியாகி விட்டது. ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். கொரோனா வைரஸ் 2 அலை மக்களிடையே தீவிரமாக பரவிவரும் நிலையில் தமிழாக்கம் முழுதும் மீண்டும் பல கட்டுபாடுகளை விதித்துள்ளனர். இதனால் தளபதி 65 படப்பிடிப்பையும் உடனே தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனே இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு சென்றார். அங்கு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டார்கள். தற்போது தளபதி 65 படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் 65 வது படத்தில் ஷைனி டாம் என்கிற நடிகர் இணைந்து உள்ளர் என்று தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படம் குறித்து இப்போதைக்கு இந்த தகவல் மட்டும் தான் வந்துள்ளது.