தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

Photo of author

By Parthipan K

தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

Parthipan K

New update of Varis movie! Photo by Lokesh Kanagaraj!

தளபதி 67   திரைப்படத்தின் நியூ அப்டேட்! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய்.இவர்  தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. மேலும் தீபாவளியில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். ஆனால் அந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து தளபதி 67 குறித்த தகவல் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வருகின்றது.

அதில் லோகேஷுடன் மலையாள நடிகை மற்றும் மலையாள தொகுப்பாளினி உடன் இருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் இவர்களும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்களா என கேள்வி கேட்ட வண்ணம்  உள்ளனர்.   மேலும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.