மீண்டும் இணையும் தளபதி-சங்கர் கூட்டணி! தரமான அரசியல் படம் உருவாக வாய்ப்பு!!

0
38

மீண்டும் இணையும் தளபதி-சங்கர் கூட்டணி! தரமான அரசியல் படம் உருவாக வாய்ப்பு!!

 

நண்பன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் கூட்டணியில் இரண்டாவது முறையாக திரைப்படம் ஒன்று உருவாகப் போவதாகவும் இந்த திரைப்படம் அரசியல் திரைப்படமாக உருவாக இருப்பதிகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தித் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

 

இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகப் போகும் தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றது. இதையடுத்து நடிகர் விஜய் அவர்களின்.69வது திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

 

நடிகர் விஜய் அவர்கள் தளபதி68 திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் அவர்கள் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

 

நடிகர் விஜய் அவர்களிடம் இயக்குநர் சங்கர் அவர்கள் கூறிய ஒரு வரி கதை நடிகர் விஜய் அவர்களுக்கு பிடித்து விட்டதால் நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

 

இயக்குநர் சங்கர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் அவர்களின் படத்துக்காக கதை எழுதத் தொடங்குவார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

 

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் தரமான அரசியல் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இயக்குநர் சங்கர் நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம் போல தளபதி69 திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் 2012ம் ஆண்டு நண்பன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.