இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!!

0
60
He will not come back to Direxan anymore!! Gautham Menon is playing Picchu!!
He will not come back to Direxan anymore!! Gautham Menon is playing Picchu!!

இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!!

கௌதம் மேனன் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகவும் தனித்துவம்  வாய்ந்தாக  அமையும். அனால் இப்பொழுது கௌதம் மேனன் அவர்கள் படம்  இயக்குவதை காட்டிலும் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

தற்பொழுது வெளியாகும் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அதனால் ரசிகர்கள் அனைவரும் இனி அவர் டைரக்சனுக்கு வர மாட்டார் நடிப்பில் பிச்சி உதறி கொண்டு இருக்கின்றார் என்று கூறி வருகின்றனர்.

ஆனாலும் கௌதம் மேனன் இயக்கிய விக்ரம் நடித்து வருகின்ற படம், துருவ நட்சத்திரம். இந்த படமானது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு வருகின்ற ஜூலை 14 ம் தேதி வெளியாக உள்ளது.

அதில் கௌதம் மேனன் இயக்கிய  2006 ம் ஆண்டு  கமல் அவர்களின் நடிப்பில்  “வேட்டையாடு விளையாடு” என்னும் படம்  வெளிவந்தது.இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக “ராகவன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இது திரில்லர் பாணியில் உருவான வெற்றி படமாகும்.இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து  வேட்டையாடு விளையாடு  நவீன முறையில் ஜூன் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வெளியான இரண்டாவது முறையும் வசூலை அள்ளி குவித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் மற்றும் இயக்குனர்  கௌதம் மேனன் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த படம் இப்பொழுது மட்டும்மல்லாமல் அப்பொழுது உள்ள ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மறு வெளியீட்டின் மூலம் இதன் பாகம் 2 வேண்டும் என்று ரசிகர்கள் கௌதம் மேனனிடம் கோரிக்கை எழுப்பினர்.

அந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன்  கூறியது ,வேட்டையாடு விளையாடு பாகம் 2 ன் கதையை கமல் சாரிடம் சொல்லிவிட்டேன் என்றார்.

அவருக்கும் கதை மிகவும் பிடித்துள்ளது என்றும் துருவ நட்சத்திரம் படத்திற்கு பின்பு இதன் 2 ம் பாகம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவருக்கு துருவ நட்சத்திரம் படத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை.கௌதம் மேனனை முழுவதுமாக நிருபிக்கும் படமாக வேட்டையாடு விளையாடு அமையும் என்று கூறப்படுகின்றது.

author avatar
Parthipan K