லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும், முதன்முறையாக இணைந்து நடித்து இருக்கின்றார். மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், போன்றோர் நடித்திருக்கின்றார்கள் இந்த திரைப்படத்தின் வெளியீடு கொரோனா பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த திரைப்படமானது ஓ.டி.டியில் வெளியிடப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது. இப்பொழுது பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 13ஆம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில், மக்கள் கூட்டம் கூடுவது மிகவும் குறைவாக இருந்தது. இந்த திரைப்படம் வெளியிடப்பட்டால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று திரை அரங்குகளின் உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று திடீரென்று சந்தித்து இருகின்றார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற முதலமைச்சர் இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ரகசிய சந்திப்பு நடந்து இருக்கின்றது. முதல் அமைச்சரை சந்தித்த நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்பட வெளியீடு விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதோடு பொங்கலில் இருந்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளருக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருப்பதாக தெரியவருகின்றது.
நடிகர் விஜய் வருவது வெளியே தெரிந்தால், அவர்களுடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும் என்ற காரணத்தால், தொற்று காலத்தில் தேவையில்லாத பதட்டத்தை உண்டாக்க வேண்டாம் என்பதற்காகவும், நேற்றைய தினம் இரவு சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாகவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றன. மாஸ்டர் திரைப்படத்திற்காக சிறப்பு காட்சிக்கு அந்த திரைப்பட குழு கோரிக்கை விடுத்தால் அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.