மாஸ்டர் திரைப்படம் விரைவில் சந்திப்போம்! இயக்குனர் தகவல்!

Photo of author

By Sakthi

மாஸ்டர் படத்திற்கு யு. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளையதளபதி விஜய் ,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா ,அர்ஜுன் தாஸ் போன்ற ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வெளியிடுவதற்கு மாஸ்டர் திரைப்பட குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், தணிக்கை குழுவினர் இந்த திரைப் படத்திற்கு யு .ஏ. சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கின்றார் .இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் சந்திப்போம் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் வன்முறையை தூண்டும் விதமான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், யு.ஏ. சான்றிதழ் அளிக்கப்பட்ட இருக்கின்றது என்று குறிப்பிட தக்கது.