கனிமொழி மற்றும் உதயநிதி இடையே நெருப்பாக புகைந்து வரும் மோதல்! விரக்தியில் திமுகவினர்!

0
108

விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி திமுகவிற்கு மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் செலவுகளால் கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். விளம்பர மோகம் காரணமாக, மேலிடத் தலைவர்கள் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, திமுக சார்பாக விடிவை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றது. திருச்சி சிவா, தயாநிதிமாறன், திண்டுக்கல் லியோனி, என்று பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் கூட கனிமொழி, மற்றும் உதயநிதி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் கனிமொழிக்காக அவருடைய ஆதரவாளர்கள் முன் வரிசையில் நின்று வேலைகளை முன்னெடுக்க தலைமையின் உத்தரவின் பெயரில் கட்சி நிர்வாகிகள் உதயநிதி முன்னிலை படுத்தி வருகிறார்கள்.

சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள், மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் உதயநிதியின் ஆதரவாளர்கள் அவருக்கு முக்கியத்துவம் தந்து கனிமொழி தரப்பு அவரை முன்னிலைப்படுத்தி வெளியிட்டு வருகின்றார்கள். ஒரு சில இடங்களில் உதயநிதி ஒதுக்கி வைக்கப்பட்ட பல இடங்களில் தனியுரிமை இருட்டடிப்பு செய்யப்பட்டார். இதன் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

இதுதொடர்பாக ஸ்டாலின் கேள்விப்பட கிச்சன் கேபினட் வந்திருக்கிறது விஷயம் நடித்துக்கொண்டிருந்த பிள்ளையை அரசியலில் எழுதிவிட்டு இப்படி அசிங்க பட வைக்க வேண்டுமா? மாநிலம் முழுவதிலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க கட்டளையிடுங்கள் என்று குரல் எழுப்ப ஸ்டாலின் மிகவும் சங்கடப் போனார் என்று தெரிகின்றது.

இதனைத் தொடர்ந்து, அவர் இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற உள்கட்சி பிரச்சனைகளுக்கு உடனடியாக தலையிடவேண்டும் அதன் காரணமாக உங்கள் புகைப்படத்தை தவிர வேறு யார் புகைப்படத்தையும் போட வேண்டாம் என்று உத்தரவிடுங்கள் என்று அவர்கள் தெரிவிக்க, அதன்படியே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். ஆனாலும் விளம்பர இம்சைகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.