தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

0
227
#image_title
தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு அடுத்து ஹைதராபாத் செல்லவுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி68 திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பற்றிய அனைத்து விவரங்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பரவிய தகவல்படியே இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள்தான் தளபதி68 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் தளபதி68 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தளபதி 68 திரைப்படம் மூலமாக இயக்குநர் வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைக்கவுள்ளார்.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜய் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான புதிய கீதை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கவுள்ளார்.
Previous articleஉலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!
Next article8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!!